தலைநகர் டெல்லியில் பாலியல் வன்புணர்வு சம்பவம், குறிப்பாக கூட்டு பாலியல் வன்புணர்வு அதிகமாகி உள்ளது. போதை மருந்து பயன்பாடு, மன சிக்கல்கள், பாலியல் வறட்சி ஆகியவை காரணமாகவே பெண்கள், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், டெல்லியில் தற்போது 12 சிறுவன், நான்கு ஆண்களால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவம் தலைநகரையே உலுக்கியுள்ளது.
வன்புணர்வு செய்த அந்த நால்வர், சிறுவனை குச்சியை வைத்து பலமாக அடித்து அப்படியே சம்பவ இடத்தில் விட்டுச்சென்றுள்ளனர். இதுகுறித்து, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் தனது ட்விட்டர் பதிவில்,”டெல்லியில் சிறுவனுக்கு கூட பாதுகாப்பு இல்லை” என குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து இந்த விவகாரத்தை பெண்கள் ஆணையம் கையில் எடுத்துள்ளதாகவும், டெல்லி காவல் துறையுடன் இணைந்து வழக்குப்பதிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அவர் கூறியதாவது,”பெண்களை விடுங்கள். டெல்லியில் சிறுவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. 12 வயது சிறுவனை நான்கு பேர் கொடூரமான முறையில் வன்புணர்வு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, குச்சியால் பலமாக தாக்கி கொலை முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம்” என்றார்.
दिल्ली में लड़की तो क्या लड़के भी सुरक्षित नहीं हैं। एक 12 साल के लड़के के साथ 4 लोगों ने बुरी तरह से रेप किया और डंडों से पीटकर अधमरी हालत में छोड़कर चले गए। हमारी टीम ने मामले में FIR दर्ज करवाई। 1 आरोपी गिरफ़्तार, 3 अब भी फ़रार, दिल्ली पुलिस को नोटिस जारी कर रही हूँ। pic.twitter.com/tXrqK7xkwm
— Swati Maliwal (@SwatiJaiHind) September 25, 2022
இதுதொடர்பாக, ஒருவரை காவல் துறையினரை கைது செய்துள்ளனர். மீதமுள்ள மூன்று பேரை தேடி வருவதாகவும் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாகத டெல்லி காவல் துறையினருக்கு, டெல்லி மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.