பயங்கரவாதிகள் தாக்குதல் 2 தொழிலாளர்கள் காயம்| Dinamalar

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பீஹாரை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் கர்போரா என்ற இடத்தில் பீஹாரை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். நேற்று இங்கு பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், சம்ஷத் மற்றும் பைசான் குவாஸ்ரி ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.