உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் பனியா கெரா கிராமத்தில் பஜ்ரங்கி (55) என்ற சாமியார் வசித்து வந்தார். இதே கிராமத்தில் சுபேதார் என்பவர் வாகனங்களை பழுதுபார்க்கும் கடையினை நடத்தி வருகிறார்.
இவரின் கடைக்குள் நாகப்பாம்பு ஒன்று நுழைந்தது. அந்த பாம்பை சுபேதார் கொல்ல முயன்றபோது அங்கு சாமியார் வந்துள்ளார். வந்தவர் அந்த பாம்பை கொல்ல வேண்டாம் என்ற கூறியுள்ளார்.
இதனால் சுபேதாரும் பாம்பை கொல்லாமல் விட்டுள்ளார். பின்னர் அந்த பாம்பை லாவகமாக பிடித்த சாமியார் அதனை ஒரு பெட்டியில் அடைத்து தன்னுடன் கொண்டுசென்றார். பின்னர் பாம்மை வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், கழுத்தில் பாம்பை சுற்றிக் கொண்டு ரீல்ஸ் எடுக்கும் போது, பாம்பு சாமியாரை கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in