பொகவந்தலாவ பிரதேசத்தில் கடும் மழை: தாழ்நிலங்கள் வெள்ளத்தில்

பொகவந்தலாவ பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் அப்பகுதியில் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பகவந்தலாவ பிரதேசத்தில் இன்று (25) பிற்பகல் பெய்த கடும் மழையினால் தாழ்நிலப் பிரதேசங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

காசல்ரி நீர்த்தேக்க நீர் வழிந்தோடும் கெசல்கமுஓயா நிரம்பி வழிவதால் , பொகவந்தலாவ சென்மேரிஸ் தேசிய பாடசாலை மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

கடும் மழை காரணமாக ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கெசல்கமுவையில் நீர் மட்டம் உயர்வதால் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.