சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக்கி உள்ளார். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ”ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தினை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் படம் வெளியாக இருக்கிறது.
அனைத்து பாடல்களும் ஹிட்
இப்படத்தின் போஸ்டர், டீஸர், இசை வெளியீட்டு விழா என அனைத்துமே மக்களிடம், படத்தினுடைய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. ஏ.ஆர். ரஹ்மானின் இசை இப்படத்திற்கு மேலும் ஒரு தனிச்சிறப்பாக அமைந்துள்ளது. இதில், பொன்னி நதி, சோழா, சோழா, ராட்சஸ மாமனே ,காதோடு சொல், அலை கடல் என அனைத்து பாடல்களும் மக்களுக்கு பிடித்து போய் அனைவரின் விருப்பப் பாடலாக மாறிவிட்டது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பு
இந்தப் பாடத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். இதனால், இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்தான தேடல்களும் எதிர்பார்ப்புகளும் திரை ரசிகர்கள் மட்டுமின்றி இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல தரப்பிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
ரன்னிங் டைம்
இத்திரைப்படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவரும் நிலையில், இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படம் 2 மணி நேரம் 47 நிமிடங்கள் ஓடும் என இதன் ரன்னிங் டைமும் வெளியாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அமேசான் நிறுவனம்
மேலும், பொன்னியின் செல்வன் படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 125 கோடி ரூபாய்க்கு பொன்னியின் செல்வன் படத்தின் 2 பாகங்களையும் ஓ.டி.டி. தளத்தில் வெளியிடுவதற்கான உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கி உள்ளது.