மிசோரமில், மியான்மர் நாட்டு எல்லை அருகே, கடத்திவரப்பட்ட ரூ.167 கோடி மதிப்புள்ள, தடைசெய்யப்பட்ட ‘மெத்திலீன் டையாக்சி மெத்தாம்பிடமைன்’ என்ற போதை மாத்திரைகள் நேற்று முன் தினம் பறிமுதல் செய்யப்பட்டன.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில், முதல்வர் சோரம்தங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மியான்மர் எல்லை அருகே, சம்பாய் மாவட்டத்தில் உள்ள மெல்புக் என்ற கிராமத்தில், மெத்தாம்பிடமைன் போதை மாத்திரை கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அசாம் ரைபிள்ஸ் படையினரும், மாநில போலீசாரும் இணைந்து, அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியே வந்த வாகனத்தில், கடத்தி எடுத்து வரப்பட்ட ஐந்து லட்சம் மெத்தாம்பிடமைன் மாத்திரைகளை பறிமுதல் செய்து அவற்றை கடத்திவந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மிசோரமில், மியான்மர் நாட்டு எல்லை அருகே, கடத்திவரப்பட்ட ரூ.167 கோடி மதிப்புள்ள, தடைசெய்யப்பட்ட ‘மெத்திலீன் டையாக்சி மெத்தாம்பிடமைன்’ என்ற போதை மாத்திரைகள் நேற்று முன் தினம் பறிமுதல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்