வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் படங்கள் பெரும்பாலான இளைஞர்களை விரைவில் கவர்ந்துவிடுகிறது, சிறந்த பொழுதுபோக்கான படங்களை தந்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இசையமைப்பாளர் கங்கை அமரனின் மூத்த மகனான இவர் சினிமாவில் பாடகராக தான் தனது முதல் அடியை எடுத்து வைத்தார், அதன் பின்னர் சில படங்களில் நடிக்க தொடங்கினார், இறுதியாக 2007ம் ஆண்டு வெளியான ‘சென்னை’ 28 படம் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்து தற்போது சிறந்த இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாடகராக மாறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘மிங் லீ சி/ஓ மாணிக்கம்’ என்கிற வெப் தொடரில் தான் வெங்கட் பிரபு பாடியுள்ளார், இந்திய குடும்பத்தினரின் பாதுகாப்பில் வளர்க்கப்படும் ஒரு சீன சிறுவனின் வாழ்க்கையை சுற்றி இந்த தொடர் அமைந்திருக்கிறது. இந்த தொடரில் தாய் மற்றும் மகனின் பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் ‘ஆராரிரோ’ என தொடங்கும் பாடலை பாடியிருக்கிறார், இந்த சென்டிமெண்டான பாடலுக்கு யுவாஜி பாடல் வரிகளை எழுத, காலா சரண் இசையமைத்து இருக்கிறார்.
Happy to launch #Aaraariro sung by @vp_offl & created by @JKSaravana @kala_charan @yuwaji
A haunting soulful single! Good job guys! @TantraEmpire @VasanthamTV #meWatch #tantrafilmshttps://t.co/c3Xg6jjdbV
— Raja yuvan (@thisisysr) September 24, 2022
வெங்கட் பிரபு பாடிய ‘ஆராரிரோ’ பாடலை அவரது உறவினரும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். இந்த ‘மிங் லீ சி/ஓ மாணிக்கம்’ என்கிற வெப் தொடரை ஜேகே.சரவணா தயாரித்தும், இயக்கியும் உள்ளார், இந்த வெப் தொடரின் 28வது எபிசோட் மீடியாகார்ப் வசந்தம் மற்றும் மீவாட்ச் ஓடிடி தளங்களில் கிடைக்கிறது.