மாஸ்கோ ; ரஷ்யாவில் ‘கோஸ்டா – 2’ என்ற கொரோனா போன்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் வவ்வால்களிடம் ‘கோஸ்டா – 2’ என்ற வைரஸ் கண்டறியப்பட்டது.
இது ‘சர்பிகோவைரஸ்’ என்ற ‘சார்ஸ் கோவிட் 2’ கொரோனாவின் துணை வகையை சேர்ந்தது. இது மனித செல்களையும் தாக்கும் வாய்ப்புள்ளதால் மனிதர்களுக்கு புதிய அச்சுறுத்தலாக அமையலாம். இந்த வைரஸ் கொரோனா தடுப்பூசியில் இருந்து கிடைக்கும் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் திறனுடையது. இந்த ‘கோஸ்டா – 2’ வைரசில், கொரோனா வைரசிடம் இருப்பதை போன்று மனித செல்களை தாக்கும் ‘ஏ.சி.இ.,-2’ புரோட்டின் உள்ளது.
இந்த வைரஸ் முதன்முறையாக 2020ல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது இது மனிதர்களை பாதிக்கும் வகையில் இருக்கும் என விஞ்ஞானிகள் மதிப்பிடவில்லை. பின் மேலும் ஆய்வு செய்தததில் இது மனிதர்களுக்கும் புரவும் என கண்டறியப்பட்டது. இது வவ்வால், பங்கோலியன், ரக்கூன் நாய், ஆசிய மர நாய் போன்றவைகளிடம் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement