உத்தரகாண்ட் மாநிலத்தில் விபச்சாரத்திற்கு உடன்படாத பெண் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் அம்மாநில பாஜக தலைவர் மகன் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கில் பாஜக மாநில தலைவர் மகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் பௌரி மாவட்டத்திற்கு உட்பட மாவட்டத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் அங்கீதா பண்டாரி (19 வயது) இளம் பெண் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று மாயமாகி இருக்கிறார்.
இதனால் பதறிப்போன பெற்றோர் தங்கள் மகளை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீஸ் சார் தரப்பில் இருந்து சரியான தகவல் கிடைக்கவில்லை
இதனை அடுத்து மாயமான அங்கீதா பண்டாரியின் பெற்றோர் சமூக வலைதளத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்த வீடியோ உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதன் பின்னர் போலீசார் இந்த வழக்கில் தீவிரம் காட்டி விசாரணை நடத்தி வந்தனர்.
அங்கீதா பண்டாரி வேலை செய்த ரிசார்ட்டின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ரிசார்டின் உரிமையாளர் புல்கித் ஆர்யா, அங்கீதா பண்டாரி மேலும் இரண்டு பேர் வெளியே செல்லும் காட்சி பதிவாகி இருந்திருக்கிறது. ஆனால் திரும்பி வரும்போது அங்கீதா பண்டாரியைத் தவிர மற்றவர்கள் மட்டும் வந்துள்ளார்கள்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ரிசார்ட்டின் உரிமையாளரிடம் விசாரித்த போது அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. ரிசார்ட்டுக்கு வரும் விருந்தினர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட அங்கீதா பண்டாரியை வற்புறுத்தியுள்ளார் புல்கித் ஆர்யா. இதற்கு அங்கீதா பண்டாரி சம்மதிக்கவில்லை. எனவே புல்கித் ஆர்யா, அங்கீதா பண்டாரியை கொலை செய்து கால்வாயில் வீசியுள்ளார்.
அந்த ரிசார்ட் உரிமையாளர் புல்கித் ஆர்யா உத்தரகாண்ட் மாநிலத்தின் பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் என்பது தெரிய வந்தது.இதை அடுத்து புல்கித் ஆர்யாவை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அங்கிதா பண்டாரியின் உடல் பிரத பரிசோதனை முடிந்து வெளியே கொண்டு வரப்பட்டபோது அங்கு வெளியே குழுமி இருந்த மக்கள் திடீரென்று போராட்டத்தில் இறங்கினர். அவர்களை காவல் துறையினர் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கி வருகின்றனர்.
இதனை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.