₹550 பெட்ரோலுக்கு ₹55,000 கேட்பதா? – இது என்ன நியாயம்? GPayவால் கஸ்டமருக்கு நேர்ந்த ஷாக்!

கையடக்க செல்ஃபோன் இருப்பதால் சில்லறை வர்த்தகம் அனைத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலேயே நடைபெற்று வருகிறது. இதனால் பணப்புழக்கம் குறைந்து யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் கோடிக்கணக்கில் அதிகரித்து வருகிறது.
குறைந்தபட்சம் 1 ரூபாயில் இருந்து பணப்பரிவர்த்தனைகள் நடத்தப்படுவதால் சுலபமான பணியாக இருந்தாலும் சமயங்களில் அதனால் பல சிக்கல்களே நேர்ந்துவிடுகிறது. அதற்கு அத்தாட்சியாக பல சம்பவங்கள் குறித்த பதிவுகள் சமூக வலைதளங்கள், செய்திகள் வாயிலாக அறிந்துக்கொள்ள முடிகிறது.
அந்த வகையில் மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் தன்னுடைய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போடச் சென்றவர் கூகுள் பே மூலம் 550 ரூபாய் கட்ட வேண்டியதற்கு பதிலாக பெட்ரோல் பங்க் ஊழியரின் கவனக்குறைவால் 55 ஆயிரம் ரூபாய் செலுத்தியிருக்கும் அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.
image
அதன்படி, பணத்தை இழந்த அந்த நபர் முதலில் தன்னுடைய ஸ்கூட்டருக்கு தானேவில் உள்ள ஷெல் பெட்ரோல் பங்க்கில் டேங்க் ஃபுல் செய்திருக்கிறார்கள். அதற்கான கட்டணமாக 550 ரூபாய் எனக் கூறியதும் அந்த வாடிக்கையாளரும் கூகுள் பே மூலம் பணம் கட்ட முற்பட்டிருக்கிறார்.
அப்போது பங்க் ஊழியர் 550 ரூபாய்க்கு பதில் 55,053 ரூபாய் என பதிவிட்டிருக்கிறார். இதனை அந்த கஸ்டமரும் முறையாக கவனிக்காமல் பேமண்ட் செய்திருக்கிறார். அதன் பிறகு தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து 55 ஆயிரம் ரூபாய் டெபிட் ஆனது குறித்து வந்த மெசேஜ்ஜை பார்த்து கடும் அதிச்சியுற்றிருக்கிறார்.
ஆனால் இந்த விவகாரம் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கவனத்துக்கு கொண்ட செல்லப்பட்டதை அடுத்து அன்றைய நாளே வாடிக்கையாளரின் கணக்குக்கு பிடித்தம் செய்யப்பட்ட பணம் திருப்பி செலுத்தப்பட்டிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.