செப்டம்பர் மாதம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அக்டோபர் 1 முதல் பல முக்கிய மாற்றங்கள் வரவுள்ளன. இதனால் சாமானிய மக்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? இதனால் யாருக்கு என்ன பாதிப்பு? வாருங்கள் பார்க்கலாம்.
குறிப்பாக சிலிண்டர் விலை முதல் வங்கி டோக்கனைசேஷன் வரையில் 5 முக்கிய மாற்றங்கள் வரவுள்ளன.
பெங்களூர் நிறுவனத்திற்கு ரூ.21,000 கோடி வரி நோட்டீஸ்.. ஜிஎஸ்டி துறை அதிரடி..!

அடல் பென்சன் யோஜனா
அக்டோபர் 1 முதல் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தினை வரி செலுத்துவோர் பயன்படுத்திக் கொள்ள முடியாது. தற்போதைய நிலவரப்படி 11 வயது முதல் 40 வயது வரையில் உள்ள அனைவரும் இந்த திட்டத்தில் இணைந்து பயனடைந்து கொள்ளலாம். ஆனால் அக்டோபர் 1 முதல் அப்படி இணைய முடியாது என்பது நினைவில் கொள்ளத் தக்கது.

சிலிண்டர் விலை குறையுமா?
ஒவ்வொரு மாத தொடக்கத்தில் சமையல் எரிவாயு விலையானது, சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படுகின்றது. தற்போது சர்வதேச சந்தையில் தேவையானது குறையலாமோ என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், விலை குறைவாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் வரவிருக்கும் அக்டோபர் மாத தொடக்கத்தில் சிலிண்டர் விலை குறையலாமோ என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது.

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டில் என்ன மாற்றம்?
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டின் விவரங்களை அக்டோபர் 1 முதல் சேமிக்க முடியாது. மாறாக டோக்கனைஷேசன் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது கார்டு பயனாளர்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமையலாம். இதன் மூலம் உங்களது தரவுகள் திருடப்படுவது இருக்காது. ஆன்லைன் மோசடிகள் தடுக்க முடியும் எனலாம்.

டீமேட் விதிகளில் மாற்றம்
நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால், இதனை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள். செப்டம்பர் 30-க்குள் Two-factor authentication செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி செய்யப்படாவிடில் நீங்கள் புதியதாக வணிகம் செய்ய முடியாமல் கூட போகலாம்.

நாமினி விதிகள்
நீங்கள் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளாராக இருந்தால் கட்டாயம் இதனை தெரிந்து கொள்ளுங்கள். அக்டோபர் 1 முதல் நீங்கள் நாமினி விவரங்களை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முன்பு கொடுக்க வேண்டியிருக்கும்.
five big changes coming into effect from October 1, 2022
five big changes coming into effect from October 1, 2022/அக்டோபர் 1 முதல் வரவிருக்கும் வரவிருக்கும் 5 முக்கிய மாற்றங்கள்.. யாருக்கு என்ன பலன்?