ஐதராபாத்: விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.
அஜித்தின் வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், விஜய்யின் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கில் வாரிசு
பீஸ்ட்டை தொடர்ந்து வம்ஷி பைடிபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் விஜய். ஒருநேரத்தில் ஒரு படத்தில் மட்டும் தான் நடிப்பது என விஜய் ரொம்ப தெளிவாக கால்ஷீட் கொடுத்து கமிட் ஆகி வருகிறார். இதனால் தான், விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான அப்டேட் எதுவும் வெளிவரவில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது உருவாகி வரும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
பொங்கல் ரேஸில் அஜித்தின் துணிவு
வம்ஷி பைடிபள்ளி இயக்கி வரும் வாரிசு திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. விஜய், ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, எஸ்ஜே சூர்யா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்து வருகிறது. வரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனிடையே அஜித்தின் துணிவு பட டைட்டில் அப்டேட், ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகின. மேலும், துணிவு திரைப்படமும் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
அவசர அவசரமாக வாரிசு அப்டேட்
அஜித்தின் துணிவு பட டைட்டில், போஸ்டர்கள் வெளியானதில் இருந்தே, சமூக வலைத்தளங்களில் விஜய் – அஜித் ரசிகர்கள் மோதி வருகின்றனர். ஏட்டிக்குப் போட்டியாக ஒருவரையொருவர் ட்ரோல் செய்து போஸ்டர்கள் வெளியிட்டு வருகின்றனர். இதனால், விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு இரண்டுமே இப்போதே ஹாட் ஆஃப் டாபிக்காக மாறிவிட்டது. இந்நிலையில், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷும் அஜித்தின் துணிவு பொங்கலுக்கு ரிலீஸாகும் என அவரது ட்விட்டரில் கொளுத்திப் போட்டுள்ளார். இதனால் விஜய்யின் வாரிசு ரிலீஸ் தள்ளிப்போகும் என தகவல் வெளியானது. இதனையடுத்து வாரிசு டீம் தற்போது அவசர அவசரமாக ஒரு அப்டேட் கொடுத்துள்ளது.
இன்று வாரிசு இறுதிக்கட்ட படப்பிடிப்பு
விஜய்யின் வாரிசு திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிலையில், வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டு சண்டைக் காட்சிகளும் இரண்டு பாடல்களும் மட்டுமே சூட் பண்ண இருப்பதாகவும், படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும் எனவும் டிவிட்டரில் அப்டேட் கொடுத்துள்ளது. அஜித்தின் துணிவு பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால், விஜய்யின் வாரிசு ரிலீஸ் தள்ளிப் போகும் எனக் கூறப்பட்ட நிலையில், இப்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.