எகிப்து: எகிப்து நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளாகப் புதைந்து கிடக்கும் ரகசியம் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் முக்கியமானது எகிப்து. உலக அளவில் மிகவும் பழமையான நாடுகளில் எகிப்தும் ஒன்றாகும்.
எகிப்து என்ற உடன் பலருக்கும் நினைவில் வருவது அங்குள்ள பிரம்மாண்ட பிரமிடுகள் தான். இதனிடையே பிரமிடுகளில் பல நூறு ஆண்டுகளாகப் புதைந்துள்ள மர்ம குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது
எகிப்து
பண்டைய எகிப்து என்பது வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உள்ள ஒரு நாகரிகமாகும். இது எகிப்திய நைல் பள்ளத்தாக்கில் அருகே அமைந்து உள்ளது. கிருத்துவ பிறப்பிற்கு முன்னரே செழிப்பாக இருந்த நகரீகங்களில் ஒன்றாக பண்டைய எகிப்து நாகரிகம் கருதப்படுகிறது. இது தொடர்பான ஆய்வுகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
பிரமிடுகள்
எகிப்து என்ற உடன் நம்மில் பெரும்பாலானோருக்கு ஞாபகம் வருவது பிரமிடுகள் தான். உலக அதிசயங்களில் ஒன்றான இந்த பிரமிடுகளில் தான் பல பண்டைய எகிப்து மன்னர்களில் உடல்கள் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டு உள்ளது. இதைத்தாண்டி இந்த பிரமிடுகளில் பல ரகசியங்கள் புதைந்து உள்ளன. அப்படி பண்டைய எகிப்தின் துட்டன்காமன் மன்னர் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
துட்டன்காமுன்
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு 1922ஆம் ஆண்டு முதல்முறையாக பண்டைய எகிப்து மன்னர் துட்டன்காமுன் கல்லறை. கண்டுபிடிக்கப்பட்டது. துட்டன்காமுனின் கல்லறையில் இறப்பிற்கு பிந்தைய அவரது வாழ்க்கைக்குத் தேவையான பொக்கிஷங்கள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. இருப்பினும், அவரது வளர்ப்புத் தாயும் பண்டைய எகிப்திய ராணி நெஃபெர்டிட்டியின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
வளர்ப்புத் தாய் எங்கே
ராணி நெஃபெர்டிட்டியின் உடல் எங்கு தான் புதைக்கப்பட்டது என்பதைக் கண்டறிய உலகெங்கும் பல இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதுவரை 16 ராயல் மம்மிகளை எடுத்து ஆய்வு செய்து உள்ளனர். அதில் துட்டன்காமுனின் பெற்றோர், தாத்த- பாட்டி மனைவி உடல்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் வளர்ப்புத் தாய் ராணி நெஃபெர்டிட்டியின் உடலை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தச் சூழலில் நெஃபெர்டிட்டியின் உடல் எங்கு இருக்கலாம் என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதைந்து கிடக்கும் மர்மம்
அதாவது துட்டன்கானின் கல்லறை காணப்பட்ட இடத்திற்கு அருகிலேயே ஒரு ரகசிய கல்லறை உள்ளதாகவும் அங்கு தான் நெஃபெர்டிட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். துட்டன்கான் தனது வளர்ப்புத் தாய் நெஃபெர்டிட்டியின் உடலை அடக்கம் செய்வது போல இருக்கும் படத்தை இதற்கு ஆதாரமாக ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள்.
எங்கே
துட்டன்கான் உடல் கண்டறியப்பட்ட கல்லறையில் தான் நெஃபெர்டிட்டியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது என்றும் அதன் பின்னர் எதிர்பாராத விதமாக 19 வயதிலேயே துட்டன்கான் மறைந்துவிட அதே இடத்தில் அவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறுகின்றனர். துட்டன்காமனின் கல்லறை நெஃபெர்டிட்டிக்காக தயாரிக்கப்பட்டு பெரிய கல்லறையின் வெளிப்புறப் பகுதி மட்டுமே என்பது ஆய்வாளர்களின் கருத்து. உள்ளே இருக்கும் ரகசிய கல்லறையில் தான் நெஃபெர்டிட்டி உடல் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.