ஆஞ்சநேயர் கோவிலில் ஆபாச படம்.. தப்பியோடிய இளைஞர் கைது..!

திருவல்லிக்கேணி ஆஞ்சநேயர் கோவிலில் அமர்ந்து ஆபாச படம் பார்த்துவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, திருவல்லிக்கேணி மேயர் சிட்டிபாபு தெருவில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்று உள்ளது. கடந்த 19-ம் தேதி இரவு, இந்த கோவிலுக்கு வந்த அடையாளம் தெரியாத 30 வயது இளைஞர் ஒருவர், கோவிலில் அமர்ந்து தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளார். அத்துடன், தான் பார்த்த ஆபாச படத்தை அங்குள்ள சிசிடிவி கேமரா முன்பும் காண்பித்துள்ளார்.

இளைஞரின் இந்த அநாகரீகமான செயல் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் குருக்கள் பிரசாத், இது குறித்து ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், கோவிலில் அநாகரிகமாக நடந்து கொண்ட அடையாளம் தெரியாத இளைஞர் மீது, மத உணர்வை புண்படுத்துதல், ஆபாச செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், சிசிடிவி கேமராவில் பதிவான அடையாளங்களைக் கொண்டு, அந்த இளைஞரை தீவிரமாக தேடி வந்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அருண் என்கிற அந்த இளைஞரை போலீசார் இன்று கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், புதுச்சேரியை சேர்ந்த அருண், திருவல்லிகேணி பகுதியில் உள்ள மேன்ஷனில் தங்கி பகுதிநேர உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றி வருவதும், தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் படித்துவிட்டு மத்திய அரசு பணிக்கு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேர்வு முடிவுகள் வர தாமதமானதால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், சம்பவத்தன்று அதிகமாக மது அருந்தியதால் போதையில் என்ன நடந்தது என்று தெரியாமல் ஆபாச படத்தை செல்போனில் பார்த்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அத்துடன், அன்றைய தினம் ஏடிஎம் கார்டு மற்றும் செல்போன் ஆகியவற்றை தொலைத்துவிட்டு புதுச்சேரி சென்று விட்டதாகவும், தன்னை மன்னித்து விட்டுவிடும்படியும் கேட்டுள்ளார். இருப்பினும் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.