சென்னை: ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆளுநரின் ஒப்புதல் பெற்று விரைவில் சட்டமாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இணையவழி சூதாட்டத்தினை தடை செய்வதற்கான சட்டம் இயற்றுவது தொடர்பாக நீதிபதி சந்துரு குழு ஆய்வு செய்து அரசிற்கு அறிக்கை அளித்தது.
