இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது, “ரூ.3969 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு லட்சம் பேருக்கு 5 சவரனுக்கு உட்பட்டு நகை கடன் ரத்து தற்போது வரை நகை கடனுக்கான உறுதிமொழி பத்திரத்தை கொடுக்காத காரணத்தால் கடனை தள்ளுபடி செய்ய முடியாத நிலையில் நிலுவையில் இருக்கிறது.
அந்த நபர்களும் உறுதிமொழி பத்திரத்தை சமர்ப்பித்தால் அவர்களுக்கு உடனடியாக கடன் தள்ளுபடி செய்யப்படும். திருநகர், அண்ணா நகர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 10 நியாய விலை கடைகள் மற்றும் கூட்டுறவு மருந்தகம் உள்ளிட்டவற்றில் கூகுள் பே மூலமாக பணத்தை செலுத்தி பொருட்களை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பருவமழை காரணமாக காய்கறி விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே பசுமை பண்ணை காய்கறி கடைகளில் குறைந்த விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.