மக்கள் இப்போது தங்களது போனில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்துவது அதிகமாகி விட்டது.
ஒரு சிம் கார்டு கால் செய்ய, இணையதளம் பயன்படுத்த மற்றும் பிற சேவைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். இரண்டாம் எண்ணை முக்கிய அழைப்புகள், ஓடிபி போன்றவற்றைப் பெற பயன்படுத்துகின்றனர்.
மேலும் பொது இடங்களிலும் இப்போது வைஃபை போன்ற சேவைகள் கிடைப்பாதல் பலரும் ஒரு சிம் கார்டில் மட்டுமே இணையதள சேவையை பயன்படுத்துகின்றார்கள். இரண்டாம் நம்பரிலும் இணையதள ரீசார்ஜ் செய்வதை வீணான செலவு என கருதுகின்றனர். ஆனால் இரண்டாம் எண்ணும் முக்கியம் என கருதுகின்றனர். எனவே ஏர்டெல் சிம் கார்டை இரண்டாம் எண்ணாகப் பயன்படுத்துபவர்களுக்காக மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
ஒரு கிராமத்துக்கே இலவசமாக மின்சாரம் வழங்கிய கோவிந்த் தோலாகியா.. யார் இவர்?
ஏர்டெல் ரூ.99 திட்டம்
ஏர்டெல் வழங்கும் 99 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்தினால் 28 நாட்களுக்கு 99 ரூபாய் டாக் டைம், 200 எம்பி அவசர பயன்பாட்டு இணையதள தரவு போன்றவை கிடைக்கும். உள்ளூர், வெளியூர் என எல்லா அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 2.5 ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்படும். உள்ளூர் எஸ்எம்எஸ் அனுப்ப 1 ரூபாயும், எஸ்டிடி எஸ்எம்எஸ் அனுப்ப 1.50 ரூபாயும் கட்டணம் பிடித்தம் செய்யப்படும். இலவச இணையதள தரவு காலியாகிவிட்டால், 1 எம்பி தரவுக்கு 50 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஏர்டெல் ரூ.109 ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெல் ரூ.109 ரீசார்ஜ் செய்யும் போது 30 நாட்களுக்கு 99 ரூபாய் டாக் டைம், அழைப்புகள் செய்ய 2.5 ரூபாய் நிமிடத்திற்கு கட்டணமாக பிடித்தம் செய்யப்படும். 200 எம்பி தரவு அவசர இணைய பயன்பாட்டுக்கு கிடைக்கும். உள்ளூர் எஸ்எம்எஸ் அனுப்ப 1 ரூபாயும், எஸ்டிடி எஸ்எம்எஸ் அனுப்ப 1.50 ரூபாயும் கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
ஏர்டெல் ரூ.111 ரீசர்ஜ் திட்டம்
ஏர்டெல் ரூ.111 ரீசர்ஜ் செய்தால் 28 நாட்கள், 30 நாட்கள் அல்லது 31 நாட்களுக்கு என ஒரு மாத வேலிடிட்டி கிடைக்கும். 99 ரூபாய் டாக் டைம், 200 எம்பி அவசர பயன்பாட்டு இணையதள தரவு போன்றவை கிடைக்கும். உள்ளூர், வெளியூர் என எல்லா அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 2.5 ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்படும். உள்ளூர் எஸ்எம்எஸ் அனுப்ப 1 ரூபாயும், எஸ்டிடி எஸ்எம்எஸ் அனுப்ப 1.50 ரூபாயும் கட்டணம் பிடித்தம் செய்யப்படும். இலவச இணையதள தரவு காலியாகிவிட்டால், 1 எம்பி தரவுக்கு 50 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஏர்டெல் பிற ரீசார்ஜ் திட்டங்கள்
ஏர்டெல் எண்ணை முதன்மையாகப் பயன்படுத்துபவர்களுக்கு வரம்பற்ற இலவச அழைப்புகள், வரம்பற்ற இணையதளம் பெறும் ரீசார்ஜ் திட்டங்களும் வழங்கப்படுகிறது. இங்கே ஏர்டெல் சிம் கார்டை இரண்டாம் எண்ணாகப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் இந்த மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளன.
Are You Using Airtel As Secondary Number? Here Are The Affordable Monthly Recharge Plans
Are You Using Airtel As Secondary Number? Here Are The Affordable Monthly Recharge Plans | ஏர்டெல் சிம் கார்டை இரண்டாம் எண்ணாகப் பயன்படுத்துகிறீர்களா? இதோ உங்களுக்கான மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள்!