ஐ.நா. சபை கூட்டத்தில் கைலாசாவின் பெண் பிரதிநிதி…. கலக்கும் நித்தி!

தமக்கென கைலாசா எனும் நாட்டை உருவாக்கி அங்கு தனி ராஜ்ஜியம் நடத்திவரும் நித்தியானந்தா சமீபகாலமாக உடல்நிலை குன்றி காணப்படுவதாகவும், மருத்துவ சிகிச்சைக்கா அவர் இலங்கையில் தஞ்சம் கேட்டதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகின.

நித்தியானந்தாவின் கோரிக்கைக்கு இலங்கை அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வந்ததாக தெரியவில்லை.. இந்த நிலையில், கைசாலாவைச் சேர்ந்த பெண் பிரதிநிதி ஒருவர் மூலம் இந்நாடு சர்வதேச அளவில் தற்போது கவனம் பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின 77 ஆவது பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள நிலையில், கைலாசா சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதராக தம்மை தாமே அறிவித்து கொண்டுள்ள நித்யானந்தாவின் சிஷ்யை விஜயபிரியா பங்கேற்றுள்ளதுதான் இந்த கூட்டத்தின் ஹைலைட்.

கணவனை கவனித்துக் கொள்ள பெண்கள் தேவை… அதிசய மனைவியின் அசத்தல் விளம்பரம்!

காவி நிற உடை, கழுத்தில் ருத்ராட்சம், நீண்ட ஜடாமுடியுடன் இருக்கும் விஜயபிரியா, தமது வலது கையில் நித்யானந்தாவின் உருவப்படத்தையும் பச்சை குத்திக் கொண்டு கூட்டத்தில் தனி அடையாளத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை சந்தித்து நித்யானந்தாவின் படத்துடன்கூடிய புத்தகங்களை அவர்களுக்கு பரிசாக அளித்த விஜயபிரியா, அந்த தலைவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். இப்புகைப்படங்கள் கைலாசாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கைலாசா நாட்டை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளதாக நித்யானந்தாவின் ஆதரவாளர்கள் ஏற்கெனவே சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். அதனை மெய்பிக்கும் விதத்தில் தற்போது கைசாலாவின் பெண் பிரதிநிதி ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.