1970-ம் ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கியவர் கோவிந்த் தோலாகியா.
முதன் முதலில் சூரத் நகரத்துக்கு வேலைத் தேடி வந்த கோவிந்த் தோலாகியா, வைர நகை உருவாக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
எல்லோர் போலவும் வேலை செய்ய வேண்டும், மாதம் முடிந்தால் சம்பளம் வாங்க வேண்டும் என்று இல்லாமல், லட்சத்துடன் செயல்பட்டு வந்தா தோலாகியா.
சீனாவுக்கும் இதே நிலை தானா.. 28 மாத சரிவில் யுவான் மதிப்பு.. !
ஊழியர்கள் மீது அக்கரை
சில வருடங்களில் தான் வேலை செய்த நிறுவனத்தையே வாங்கும் அளவிற்கு முன்னேறினார். வேலைக்குச் சென்ற ஆரம்பக் காலத்தில் தான் சந்தித்த சிக்கல்களை என்றும் மறக்காத தோலாகியா, தனது ஊழியர்கள் அப்படி சிரமப்படக் கூடாது என்பதில் மிகவும் அக்கரையாக இருந்தார்.
பரிசுகள்
அண்மையில் தனது நிறுவன ஊழியர்களை குடும்பத்துடன் சுற்றுலாவுக்குச் செல்ல ஏற்பாடு செய்து தந்துள்ளார். மேலும் தனது ஊழியர்களுக்கு கார், வீடு, ஸ்கூட்டர் போன்றவற்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.
ராமர் கோவில்
ஆன்மீகவாதியான கோவிந்த் தோலாகியா, அயோதியாவில் தற்போது கட்டி வரும் ராமர் கோவிலுக்கு 11 கோடி ரூபாயை நன்கொடை வழங்கியுள்ளார். மேலும் ஸ்ரீ ராம கிருஷ்ணா அறிவொளி இயக்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
சென்ற ஆண்டும் கோவித் தோலாகியாவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் வருக்கு தோன்றியது. உடனே அது குறித்து தனது குடும்பத்தினருடன் ஆலோசனையில் ஈடுபட்ட தோலாகியா, ஒரு கிராமத்தைத் தேர்வு செய்தார்.
சூரிய ஒளி மின்சாரம்
அந்த கிராம முழுவதும் பயன்படுத்த ஏற்றவாறு கோல்டி சோலார் நிறுவனத்துடன் இணைந்து 276.5 kW கொள்ளளவு கொண்ட சூரிய ஓளி மின்சாரம் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளார். இதனால் அந்த கிராமத்தில் உள்ள 232 வீடுகள், கடைகள் போன்றவற்றுக்கு இலவசமாக மின்சாரம் கிடைத்துள்ளது.
மகிழ்ச்சியில் கிராம மக்கள்
கோவிந்த் தோலாகியாவின் இந்த செயலால் மகிழ்ச்சி அடைந்துள்ள அந்த கிராம மக்கள், தங்களது மின்சார கட்டணம் இப்போது மிச்சம் ஆகிவருகிறது. மின்வெட்டு என்ற பேச்சிக்கே இடமில்லை. கிராம மக்கள் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் கணக்கான ரூபாயை மிச்சப்படுத்தி வருகின்றனர் என கூறுகின்றனர்.
Govind Dholakia Donated Free Electricity To Village. Who is He?
Govind Dholakia Donated Free Electricity To Village. Who is He?