கர்நாடக அரசு அரசின் புதிய கொள்கை.. பிற மாநிலத்தவர்களுக்குப் பாதிப்பா..?!

பெங்களூர்: கர்நாடக அரசு தனது மாநில மக்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான கொள்கையைக் கொண்டு வந்துள்ளது.

இந்தக் கொள்கை மூலம் பெங்களூர் மற்றும் கர்நாடக-வின் பிற முக்கிய வர்த்தகப் பகுதிகளில் இருக்கும் நிறுவனங்களுக்குக் குழப்பத்துடன் கூடிய பயம் உருவாகியுள்ளது.

சென்னையில் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தி.. அதிரடி அறிவிப்பு!

பசவராஜ் பொம்மை

பசவராஜ் பொம்மை

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசு, அம்மாநிலத்தில் கன்னடர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறந்த வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் கன்னட மொழி விரிவான மேம்பாட்டுச் சட்டம் 2022-ஐ வெள்ளிக்கிழமை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.

கன்னட மொழி

கன்னட மொழி

இந்தக் கன்னட மொழி விரிவான மேம்பாட்டுச் சட்டம் 2022ல் உள்ளூர் மக்களுக்கு வாய்ப்புகளை வழங்காமல் இருக்கும் குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்தால் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைத் திரும்பப் பெறப்படும் என்றும், அபராதம் விதிக்கும் சட்டதிட்டங்களும் உள்ளது.

மோகன்தாஸ் பாய்
 

மோகன்தாஸ் பாய்

இதைத் தொடர்ந்து Aarian Capital நிறுவன தலைவரும், இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரியுமான மோகன்தாஸ் பாய், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து இப்புதிய கொள்கை குறித்து ஆலோசனை செய்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஊக்க தொகை

ஊக்க தொகை

இந்தச் சந்திப்பில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களுக்கு மோகன்தாஸ் பாய் உள்ளூர் மக்களுக்கு வாய்ப்புகளை வழங்காததற்காக நிறுவனங்களுக்கும், தொழிற்துறை நிறுவனங்களின் மீது அபராதம் விதிப்பதை விட, கன்னடர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவோருக்கு ஊக்க தொகை கொடுக்கலாம் எனப் பரிந்துரை செய்துள்ளார்.

நிலம்

நிலம்

அதாவது நான் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை அமைப்பதற்காக மாநிலத்திடம் இருந்து நிலம் வாங்கினால், நீங்கள் வேலைக்கு அமர்த்தும் ஒவ்வொரு கன்னடருக்கும், விலையில் குறிப்பிட்ட ரூபாய் குறைக்கவும். இது மக்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும், மேலும் இது அவர்களுக்கு அபராதம் விதிப்பதை விடச் சிறந்ததாக இருக்கும் எனப் பரிந்துரைத்தேன் என மோகன்தாஸ் பாய்க் கூறியுள்ளார்.

மக்கள் கருத்து

மக்கள் கருத்து

மோகன்தாஸ் பாய் பரிந்துரையைக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கருத்தில் கொள்வதாக அவர் கூறியதையும் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசின் இத்தகைய விதிமுறைகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Basavaraj Bommai assured to incentivise hiring Kannadigas not to give penalty, says Mohandas Pai

Bommai has assured to incentivise hiring Kannadigas not to give a penalty, says Mohandas Pai suggestion on Kannada Language Comprehensive Development Act 2022 clauses

Story first published: Monday, September 26, 2022, 20:58 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.