திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடம் செல்போன் திருட முயன்ற வழக்கில் முருகானந்தம் என்பவர் கைது செய்யப்பட்டார். சமயபுரம் காவல் நிலைய கழிப்பறையில் முருகானந்தம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் விவகாரம், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மண்டல ஐ.ஜி சரவணசுந்தர் தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் கவனக்குறைவாக இருந்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.