உலகம் முழுவதும் தற்போது வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது என்பதும் வேலை பார்த்து வரும் ஊழியர்களையே பணி நீக்கம் செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் புதிதாக வேலை கிடைக்க வேண்டுமென்றால் வித்தியாசமாக ஏதேனும் செய்தால் மட்டுமே வேலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் இளம்பெண் ஒருவர் தனக்கு வேலை கிடைக்க கேக்கில் ரெஸ்யூமை பிரிண்ட் செய்து அனுப்பி உள்ளதாக தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
ராஜஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்.. 1200 கோடி ரூபாய் முதலீடு..!
ரெஸ்யூம்
வேலை தேடுபவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பும் போது வித்தியாசமாக தனித்திறமைகளை குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது என்பது தெரிந்ததே. அந்த வகையில் நைக் நிறுவனத்துக்கு தனது ரெஸ்யூமை அனுப்பிய கார்லி பாவ்லினாக் என்ற இளம்பெண் வித்தியாசமான முறையில் ரெஸ்யூம் அனுப்பியுள்ளது குறித்த செய்தி இணையங்களில் வைரலாகி வருகிறது.
கேக்கில் ரெஸ்யூம்
இதுகுறித்து கார்லி பாவ்லினாக் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் கூறியபோது, ‘நான் சில வாரங்களுக்கு முன்னர் நைக் நிறுவனத்தில் எனது விண்ணப்பத்தை அனுப்பினேன். வழக்கமான முறையில் விண்ணப்பத்தை அனுப்பினால் பத்தோடு பதினொன்று ஆகி விடும் என்பதால் நைக் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்தேன். இதனை அடுத்து என்னுடைய விண்ணப்பத்தை ஒரு கேக்கில் அச்சிட்டு அனுப்பினேன் என்று கூறியுள்ளார்.
லிங்க்ட்-இன் பதிவு
வேலை தேடி வரும் நான் என்னுடைய சில திறமைகளை தனிமைப்படுத்தி வெளிப்படுத்த விரும்பினேன். இதையடுத்து பலமுறை யோசித்த நான் ஒரு மிகப்பெரிய விருந்து கேக்கில் என்னுடைய ரெஸ்யூமை பிரிண்ட் செய்து அனுப்பலாம் என்று யோசனை செய்தேன்.
நண்பரின் பரிந்துரை
நைட் நிறுவனத்தில் வேலை பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் இருந்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும் கேக்கின் மீது விண்ணப்பத்துடன் அச்சிட்டு நைட் நிறுவனத்திற்கு அனுப்ப நண்பர் ஒருவர் தனக்கு பரிந்துரை செய்ததாகவும் கூறினார்.
வேலை கிடைத்ததா?
இந்த நிலையில் நைக் நிறுவனத்தின் தலைமையகத்தில் ஒரு விழா கொண்டாடப்படுவதை அறிந்து அன்றைய தினம் எனது ரெஸ்யூம் கேக் அவர்களுக்கு கிடைக்குமாறு அனுப்ப முடிவு செய்தேன் என்று கார்லி பாவ்லினாக் கூறினார். ஆனால் அதே நேரத்தில் அவருக்கு அந்த நிறுவனத்தில் வேலை கிடைத்ததா? என்பது குறித்து அவர் பதிவு செய்யவில்லை.
நெட்டிசன்களின் ரியாக்சன்
இந்த ரெஸ்யூம் கேக் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் இது குறித்து கலவையான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். வித்தியாசமான சிந்தனை, வித்தியாசமான முயற்சி என்று பலர் இதனை பாராட்டி உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் இது ஒரு தவறான வழிமுறை என்றும் வேலை கொடுப்பவரை திசை திருப்ப வைக்கும் முயற்சி என்றும் சிலர் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
சமூகவலைத்தளங்களில் பரபரப்பு
மொத்தத்தில் அவருக்கு நைட் நிறுவனத்தில் வேலை கிடைக்காதோ இல்லையோ இந்த ரெஸ்யூம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று குறிப்பிட்டதை.
Woman sends resume to Nike printed on a cake, viral LinkedIn post
Woman sends resume to Nike printed on a cake, viral LinkedIn post |கேக்கில் பிரிண்ட் செய்யப்பட்ட ரெஸ்யூம்.. வித்தியாசமாக வேலை தேடிய இளம்பெண்!