இந்தியாவில் மிகப்பெரிய பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில் அமேசான், பிளிப்கார்ட் முதல் டன்சோ, செப்டோ வரையில் அனைத்து நிறுவனங்களும் தள்ளுபடி விற்பனைக்குத் தயாராகி வருகிறது.
கொரோனா பாதிப்பு இல்லாமல் 2 வருடத்திற்குப் பின்பு எவ்விதமான கட்டுப்பாடுகள் இல்லாமல் நடக்க இருக்கும் பண்டிகை கால விற்பனை என்பதால் அனைத்துத் தரப்பு நிறுவனங்களும் இந்தப் பண்டிகை காலத்தில் அதிக வர்த்தகம், வருவாய் பெற வேண்டும் எனத் திட்டம் தீட்டியுள்ளது.
இதற்காகச் சாம்சங் அறிமுகம் செய்துள்ளது தான் இப்புதிய கிரெடிட் கார்டு.
டிசிஎஸ்: வாரம் 3 நாள் கட்டாயம் ஆபீஸ்.. புதிய உத்தரவு..!
தீபாவளி பண்டிகை
இந்தத் தீபாவளி பண்டிகை மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் முதல் கார், பைக்,வீடு விற்பனை செய்பவர்கள் வரையில் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
சாம்சங் மற்றும் ஆக்சிஸ் வங்கி
இந்த நிலையில் சாம்சங் மற்றும் ஆக்சிஸ் வங்கி இணைந்து விசா மூலம் இயங்கும் பிரத்யேக கோ பிராண்டட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியது. இந்தப் பிரத்தியேக கிரெடிட் கார்டு மூலம் மிகப்பெரிய தொகையைச் சேமிக்க முடியும்.
என்ன சலுகை
அப்படி இந்தக் கிரெடிட் கார்டின் சிறப்பு என்ன? Samsung Axis Bank கிரெடிட் கார்டு மூலம், வாடிக்கையாளர்கள் ஆண்டு முழுவதும் அனைத்துச் சாம்சங் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வாங்கும் போது 10 சதவீத கேஷ்பேக் தொகையைப் பெறு முடியும்.
10% கேஷ்பேக்
தற்போதுள்ள Samsung சலுகைகளை விட வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கும் வகையில், Samsung Axis Bank கிரெடிட் கார்டு மூலம் 10% கேஷ்பேக் சலுகை என்பது ஜாக்பாட் தான். இந்தக் கேஷ்பேக் ஆஃபர் EMI மற்றும் EMI அல்லாத விற்பனைகளுக்கும் பொருந்தும்.
சாம்சங் பொருட்கள்
ஸ்மார்ட்போன், டேப்லெட்டு, லேப்டாப், டிவி, பிரிட்ஜ், ஏசிகள், வாஷிங் மெஷின்கள் அல்லது சர்வீஸ் சென்டர் பேமெண்ட்கள், Samsung Care+ மொபைல் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டிகள் போன்ற அனைத்துச் சாம்சங் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் போது 10% கேஷ்பேக் பெற முடியும்.
Samsung Launched Credit Card with Axis Bank for festive season with amazing benefits
Samsung Launched Credit Card with Axis Bank for festive season with amazing benefits