யானையின் வைரல் வீடியோ: யானையின் வைரல் வீடியோ: பலவிதமான அற்புதமான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது, அதிலும் குறிப்பாக யானைகள் செய்யும் சில அழகான மற்றும் வேடிக்கையான செயல்கள் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. யானைகளும், யானைக்குட்டிகளும் பெரும்பாலும் இணையத்தை ஆக்கிரமித்து இருக்கின்றன, அவற்றின் செயல்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் மனதை இதமாக்குவதாகவும் அமைந்து இருக்கிறது. சமீபகாலமாக யானைகள் செய்யும் குறும்புகள் பல இணையவாசிகளை கவர்ந்து வருகிறது, அதேபோல தற்போது ஒரு கும்கி யானையின் கியூட் செயல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இந்த வீடியோ ஆனைமலை புலிகள் காப்பகத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் உள்ள டாப்ஸ்லிப் சிறந்த சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. இங்கு அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கோழிகமுத்தி, வரகளியார் யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகள் மற்றும் கும்கி யானைகள் உள்ளிட்ட 27 யானைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு வளர்க்கப்படும் கும்கி யானைகளை கொண்டு ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுதல் அல்லது பிடிக்கும் பணியில் ஈடுபட்ட ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இதைத்தவிர வனப்பகுதியில் ரோந்து செல்லும் பணிகளுக்கும் பயிற்சி பெற்ற கும்கி யானைகளை பயன்படுத்துகின்றனர்.
இங்கு பராமரிக்கப்படும் யானைகளை தினமும் முகாம் அருகே உள்ள ஆற்றில் யானை பாகன் குளிக்க வைத்து உணவு வழங்குவது வழக்கமாகும்.
அந்த வகையில் தற்போது அங்குள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகள் 38 வயது உள்ள மாரியப்பன் என்கின்ற கும்கி யானையை அங்குள்ள ஆற்றில் குளிக்க வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது. அப்போது அந்த கும்கி யானை சுகமாக தண்ணீரில் படுத்திருக்கும் காட்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
வீடியோவை இங்கே காண்க:
இணையவாசிகள் பலரையும் இந்த வீடியோ பெரிதும் கவர்ந்து இருக்கிறது, இந்த வீடியோவை இதுவரை பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இணையாவசிகள் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் இதற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.