ஷாங்காய்: இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து வரலாறு காணாத சரிவினைக் கண்டு வருகின்றது. ரூபாய் மட்டும் அல்ல, ஆசிய நாணயங்கள் பலவும் சரிவினைக் கண்டு வருகின்றன.
குறிப்பாக உலகின் முன்னணி பொருளாதார நாடாக இருந்து வரும் சீனாவின் யுவான் மதிப்பும், டாலருக்கு எதிராக 28 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டு, 7.1606 என்ற லெவலில் காணப்படுகின்றது. கடந்த 1 வருடத்தில் யுவானின் மதிப்பு 10.89% சரிவினைக் கண்டும், இது நடப்பு ஆண்டில் இதுவரையில் 12.66% சரிவினைக் கண்டும், 3 மாதத்தில் 7.01%மும், 1 மாதத்தில் 3.66%மும், கடந்த 5 நாட்களில் 2.20% சரிவினைக் கண்டும் காணப்பட்டது.
சீனாவின் மக்கள் வங்கி அன்னிய செலவாணி சரிவால், செப்டம்பர் 28 முதல் அதனை மேம்படுத்தும் நடவடிக்கையினை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேக்கில் பிரிண்ட் செய்யப்பட்ட ரெஸ்யூம்.. வித்தியாசமாக வேலை தேடிய இளம்பெண்!
சரியலாம்
எனினும் தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு எதிரான யுவான் மதிப்பு மேற்கொண்டு சரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியினை கண்டு வரும் நிலையில், மேற்கொண்டு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் பல முக்கிய நகரங்களில் இன்றும் கொரோனாவின் தாக்கம் இருந்து வரும் நிலையில், பல முக்கிய நகரங்களில் ஜீரோ கோவிட் பாலிசி அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜிடிபி வளர்ச்சி
கடந்த மூன்று மாதங்களில் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியினை கண்டு வரும் நிலையில், ஜிடிபி விகிதமும் 0.4% மட்டுமே வளர்ச்சியினை கண்டுள்ளது. இது முந்தைய காலாண்டில் 4.8% வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் நிலவிய கடுமையான வெப்பத்தின் மத்தியில், நீர்மின் உற்பத்தியானது சரிவினைக் கண்டது குறிப்பிடத்தக்கது. இதனால் சீனாவின் பல உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தியும் சரிவினைக் கண்டுள்ளது.
உற்பத்தி சரிவு
அலுமினியம் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் யுனான், நீர் மின் உற்பத்தி சரிவால் 13% ஆக இருந்த உற்பத்தி விகிதம் 10% ஆக குறைத்துள்ளது. சீனாவின் மற்றொரு முக்கிய பகுதியான ஹூனான் 80% பகுதியானது வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றது. இப்பகுதியில் விவசாய உற்பத்தியானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை சரியலாம்
இது தவிர பல அண்டை நாட்டு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியியை சீனாவினை விட்டு வெளியேற திட்டமிட்டு வருகின்றன. இதற்கிடையில் சீனாவில் அன்னிய முதலீடுகள் குறைந்து வருகின்றன.
சீனாவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் தேவையும் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு யுவான் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
China’s yuan ends at 28 month low amid slowdown
China’s yuan ends at 28 month low amid slowdown/சீனாவுக்கும் இதே நிலை தானா.. 28 மாத சரிவில் யுவான் மதிப்பு.. !