Gold price today: தங்கம் விலையானது தொடர்ந்து 1700 டாலர்களுக்கு கீழாகவே தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது. குறிப்பாக இன்று சர்வதேச சந்தையில் இரண்டரை வருட குறைந்தபட்ச விலையினை எட்டிள்ளது.
இது இந்திய சந்தையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு சரிவினைக் காணுமா? இது வாங்க சரியான வாய்ப்பா? வாருங்கள் பார்க்கலாம்.
அக்டோபர் மாத கான்ட்ராக்டில் எக்ஸ்பெய்ரி ஆகவுள்ள நிலையில், இதுவும் நடப்பு மாத கான்ட்ராக்டில் இருக்கும் ஆர்டர்களை முடித்து கொள்ள வழிவகுக்கலாம். இதனால் அடுத்த கான்ட்ராக்டில் வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டலாம். இருக்கும் ஆர்டர்களை விற்று வெளியேறலாம். அடுத்த கான்ட்ராக்டில் ரோல் ஓவர் செய்யலாம்.
7.5 சதவீத தள்ளுபடி விலையில் தங்கம் வேண்டுமா.. டாடா வழங்கும் சிறப்பு சலுகை!
2 1/2 வருட சரிவில் தங்கம்
தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பானது உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இது மேற்கொண்டு தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேற்கொண்டு அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு டாலரின் மதிப்பினை மேலும் ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. இதற்கிடையில் தங்கம் விலையானது 2 1/2 வருட சரிவில் காணப்படுகின்றது.
டாலரின் அழுத்தம்
கடந்த ஏப்ரல் 2020ல் தங்கம் விலையானது 1638.59 டாலர் என்ற லெவலில் காணப்பட்டது. இன்று குறைந்தபட்சமாக 1634.20 என்ற லெவலை தொட்ட நிலையில், இது தற்போது சற்று அதிகரித்து காணப்படுகிறது. இது டெக்னிக்கலாக இன்னும் சற்று குறையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. தொடர்ந்து அதிகரித்து வரும் டாலரின் மதிப்பு மேற்கொண்டு அழுத்தத்தினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டியில்லா முதலீடா?
டாலரின் மதிப்பு தொடர்ந்து உச்சம் எட்டி வரும் நிலையில், இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் 2000 டாலர்களை எட்டிய நிலையில், இது தற்போது 20% சரிவில் காணப்படுகின்றது. இவ்வறு குறைந்த விலையானது
தங்கத்திற்கு ஆதரவளிக்கலாம்.
முக்கிய தரவுகள்
அமெரிக்காவின் வணிகம் குறித்தான தரவு, வேலை குறித்தான தரவுகள் என அனைத்தும் முதலீட்டாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக தொடர்ந்து பல நாடுகளில் ரெசசன் அச்சம் நிலவி வரும் நிலையில், இது மேற்கொண்டு தங்கத்தினை குறைந்த விலையில் வாங்க வழிவகுக்கலாம்.
தேவை அதிகரிக்கலாம்
சீனாவில் தேவை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவிலும் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் கடந்த 4 வாரங்களாகவே குறைந்த விலையில் காணப்படுவது, வாங்க சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை?
சர்வதேச சந்தையில் தங்கம் விலை 11.70 டாலர்கள் குறைந்து, அவுன்ஸுக்கு 1643.90 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்க விலை சற்று கீழாக தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது மேற்கொண்டு மீடியம் டெர்மில் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை?
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 2.14% குறைந்து, 18.508 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. இது வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து, 49,379 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலையை உடைக்கவில்லை. எனினும் தங்கம் விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையிலும் வெள்ளி விலை பெரும் சரிவினைக் கண்டுள்ள நிலையில், இந்திய சந்தையில் தற்போது கிலோவுக்கு 648 ரூபாய் குறைந்து, 55,570 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது.கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை இதுவரையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு, 1 ரூபாய் அதிகரித்து, 4651 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து, 37,208 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து, 5074 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 8 ரூபாய் அதிகரித்து, 40,592 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, 50,740 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 80 பைசா குறைந்து, 60.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 607 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்து, 60,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.46,510
மும்பை – ரூ.46,000
டெல்லி – ரூ.46,150
பெங்களூர் – ரூ.46,050
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.46,510
gold price on 23rd September 2022: gold prices nearly two and half year low amid dollar strength
gold price on 23rd September 2022: gold prices nearly two and half year low amid dollar strength/சூப்பர் சான்ஸ்.. தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. இனியும் குறையுமா?