சென்னை: செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் கடந்த 2002-ல், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2-வது பேருந்து நிலையம் மாதவரத்தில் அமைக்கப்பட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதன்பிறகு 3-வது பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 4-வது புறகர் பேருந்து நிலையம் திருமழிசை, குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. இதன்படி செங்ல்பட்டு மருத்துவக் கல்லூரி அருகில் 15.67 ஏக்கர் பரப்பளவிலும், மாமல்லபுரத்தின் திருக்கழுக்குன்றத்தில் 6.79 ஏக்கர் பரப்பளவிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.
இதனிடையே, கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ள சூழலில், அங்கு பயணிகள் எளிதில் செல்ல தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. இல்லையேல் அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை வெகுவாக இழக்க நேரிடும் என போக்குவரத்து ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். விரிவாக வாசிக்க > கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு மக்கள் எளிதில் செல்ல அரசு செய்ய வேண்டியது என்ன?