ரேடியோவில் விளம்பரங்கள் கோலோச்சிய காலத்தில் தன் தனித்துவமான குரலின் மூலம் கவனம் ஈர்த்தவர் எஸ்.வி.ரமணன். சிவாஜி நடித்த `உருவங்கள் மாறலாம்’ உள்பட சில படங்களை இயக்கிய இவர் தனது 84ம் வயதில் காலமானார்.
அந்த காலம் அது அது… காலத்தில் ரேடியோ விளம்பரங்களைல் தனது தனித்துவமான குரலால் பிரபலமானவர் எஸ்.வி.ரமணன். இசையமைப்பாளரான ரமணன், பழம்பெரும் இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் மகனாவார்.
”ரேடியோவில் முதன்முதலில் விளம்பரங்களில் பல புதுமைகளை புகுத்தியவர் ரமணன் தான். ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான விளம்பரங்கள். டெலி ஃபிலிம்கள், டாகுமென்ட்ரிகள் தயாரித்திருக்கிறார் இவர். தூர்தர்ஷனுக்காக சரித்திர, சமூக ஆன்மிக நாடகங்களையும் தயாரித்திருக்கிறார்.
ஜெயகாந்தனின் “யாருக்காக அழுதான்” படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் ஆனார். இசை அமைப்பாளர் சலீல் சவுத்திரியிடம் ‘செம்மீன்’, ‘ஜல்தீப்’ ஆகிய படங்களுக்கும், சி.என்.பாண்டுரங்கனின் ‘எதிர்பாராதது’, ‘கச்ச தேவயானி’, `பாண்டித்தேவன்’ ஆகிய படங்களுக்கும் உதவியாளராக இருந்திருக்கிறார்.
சன் டி.வி.யில் `காவிரியின் கதை’ என்ற சீரியலை இயக்கியிருக்கிறார். ஒரு காலத்தில் மேடைக்கச்சேரிகளையும் நிகழ்த்தியிருக்கிறார். அப்பா கே.சுப்ரமணியம் இயக்குநர் என்பதால், இவரும் சில படங்கள் இயக்கியிருக்கிறார். அதில் `உருவங்கள் மாறலாம்’ படத்தில் சிவாஜி, கமல், ரஜினி, ஒய்.ஜி.மகேந்திரன், சுஹாசினி என பலரும் நடித்திருப்பார்கள்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இன்று காலமானார். இறந்த ரமணன், இசையமைப்பாளர் அனிருத்தின் தாய்வழி மாமா ஆவார். அபஸ்வரம் ராம்ஜி, இவரது சகோதரர் ஆவார்.