உலகில் அனைத்து பெரும் நிறுவனங்களும் எதிர்வரும் பொருளாதார மந்த நிலை காரணமாகவும், நீண்ட கால நிலையான வளர்ச்சிப் பாதைக்கு வித்திடவும் பல நிர்வாக மற்றும் மறுசீரமைப்பு முடிவுகளையும் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் 150 வருடமாக இயங்கி வரும் டாடா குழுமம், தற்போது மிகப்பெரிய மாற்றத்தைச் செய்ய உள்ளது. இந்த முக்கியமான மாற்றத்தைச் செய்ய முடிவு எடுத்தது டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான சந்திரசேகரன் தான்.
சந்திரசேகரனின் முடிவு டாடா குழும முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. சொல்லப்போனால் அதானி, ரிலையன்ஸ் குழுமம் முதலீட்டாளர்களும் தற்போது டாடா குழுமத்தில் முதலீடு செய்யத் திருப்பியுள்ளனர்.
டிசிஎஸ்: வாரம் 3 நாள் கட்டாயம் ஆபீஸ்.. புதிய உத்தரவு..!
சந்திரசேகரன்
டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் டாடா குழுமம் பல முக்கிய மாற்றங்களையும், வர்த்தக விரிவாக்கமும் செய்யப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானவை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையும், லாபத்தையும் அளித்துள்ளதால் சந்திரசேகரன் முடிவின் மூலம் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை
இந்த நிலையில் இந்திய பங்குச்சந்தையில் டாடா குழுமத்தில் இருந்து சுமார் 29 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளது, இந்த எண்ணிக்கையை 15 ஆகக் குறைக்கத் திட்டமிட்டு, அதற்கான பணிகளை ஏற்கனவே துவங்கியுள்ளார் சந்திரசேகரன்.
எதிர்கால வளர்ச்சி பாதை
சந்திரசேகரனின் இந்த முடிவு 150 வருட பழமையான டாடா குழுமத்தை வர்த்தகத்தில் மட்டும் அல்லாமல் நிர்வாக அளவிலும் எதிர்கால வளர்ச்சிப் பாதைக்குத் தயார்ப்படுத்த உள்ளார். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதால் என்ன லாபம்.
டாடா உயர்மட்ட நிர்வாகம்
டாடா குழுமத்தில் 29 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளது, இந்த எண்ணிக்கையைக் குறைப்பதால் டாடா உயர்மட்ட நிர்வாகம் குறைந்த எண்ணிக்கை நிறுவனத்தில் முதலீடு செய்யும், அது சந்தையில் போட்டியைச் சமாளித்து அதிகப்படியான வளர்ச்சியை எட்டும் பெரிய நிறுவனமாக இருக்கும்.
டாடா சன்ஸ்
டாடா குழும நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் சுமார் 128 பில்லியன் டாலர் வருவாயும், 255 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீடும் கொண்டு உள்ளது. இந்த நிறுவன மறுசீரமைப்பு, திட்டமிட்ட முதலீடு ஆகியவற்றின் மூலம் அடுத்த ஒரு அல்லது 2 வருடத்திற்குள்ள 300 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை எட்டும்.
உலோக வர்த்தகம்
சந்திரசேகரனின் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் முதல் படி தான் டாடா குழுமம் தனது உலோக வர்த்தகத்தில் செலவுகளைக் குறைக்கவும், செயல்திறனை அதிகரிக்கவும் டாடா குழுமத்தில் இருக்கும் 7 உலோகம் சார்ந்த நிறுவனங்களை டாடா ஸ்டீல் நிறுவனத்துடன் இணைக்க உள்ளதாக வெளியான அறிவிப்பு.
7 நிறுவனங்கள்
டாடா குழுமம் வெளியிட்ட அறிவிப்பின் படி டாடா ஸ்டீல் லாங் ப்ராடெக்ட்ஸ், டாடா மெட்டாலிங்க்ஸ், டின்பிளேட் கம்பென் ஆப் இந்தியா, TRF, இந்தியன் ஸ்டீல் & வயர் ப்ராடெக்ட்ஸ், டாடா ஸ்டீல் மைனிங், S&T மைனிங் ஆகிய 7 நிறுவனங்களை டாடா ஸ்டீல் நிறுவனத்தில் இணைக்கப்பட உள்ளது. இதனால் டாடா ஸ்டீல் வர்த்தகம் அனைத்து பிரிவிலும் அதிகளவிலான வர்த்தகத்தையும், உதவிகளையும் பெறும்.
TATA Sons Chandrasekaran big plan; Cutting down 29 listed tata firms to 15 ensuring future ready
TATA Sons Chandrasekaran big plan; Cutting down 29 listed tata firms to 15 ensuring future ready