புதுடெல்லி: தந்தையாக பழகுவதாக கூறிய தயாரிப்பாளரை இன்று பார்த்தாலும் ‘ஷூ’வால் அடிப்பேன் என்று தனது பழைய நினைவுகளை நடிகை ரத்தன் ராஜ்புத் பகிர்ந்து கொண்டார். பாலிவுட் மற்றும் தொலைகாட்சி நடிகை ரத்தன் ராஜ்புத்தின் தந்தை சமீபத்தில் காலமானதால் அவர் நடிப்பதில் இருந்த ஒதுங்கி இருந்தார். கொரோனா தொற்றுநோய் காலத்தில் ெதாடங்கிய தனது யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த சேனலில் அவர் அளித்த பேட்டியில், ‘கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை சென்றிருந்தேன். 60 முதல் 65 வயதுடைய தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்தேன்.
அவர் என்னிடம், ‘உன்னை அழகுபடுத்த சுமார் 2 முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை செலவாகும். உனக்காக அந்தப் பணத்தை நான் செலவழிக்கிறேன். அதற்காக என்னை நீ தந்தையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நட்பாக பழக வேண்டும்’ என்றார். அதற்கு நான், ‘எப்படி உங்களுடன் நட்பு கொள்வது? என் தந்தை வயதில் உள்ள உங்களுடன் எப்படி நட்பு கொள்வது?’ என்றேன். அவ்வாறு நான் கூறியதால் கோபமடைந்த அவர், ‘என் மகளாக இருந்தாலும், நடிகையாகி விட்டால் நான் அவருடனும் நெருக்கமாக இருப்பேன்; அவருடன் படுப்பேன்’ என்றார். அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பின்னர் கடுமையான வார்த்தைகளால் அந்த மனிதரை திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். ஆனால் அந்த மனிதன் என்னை எதுவும் செய்யவில்லை.
ஆனால் அந்த தயாரிப்பாளரின் வார்த்தைகள் என் மனதில் கடுமையானவிளைவுகளை ஏற்படுத்தியது. அதனால் கிட்டத்தட்ட ஒரு மாதமாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை; யாரையும் சந்திக்கவில்லை. இன்று தயாரிப்பாளரை சந்தித்தால் கூட, அவரது முகத்தில் ஷூவால் அடிப்பேன்’ என்று ஆவேசத்துடன் கூறினார்.