தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. டெல்லி பறக்கிறார் கவர்னர் ரவி..!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று மாலை டெல்லி செல்கிறார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

அங்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இந்த சம்பவங்கள் குறித்து கவர்னர் பேசுவார் என்றும், மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உள்துறை அமைச்சரிடம் ஆலோசனை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.