தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் செப்டம்பர் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள்.
அடுத்த மாதம் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இன்று பல்வேறு துறை அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளார்.
மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அளவில் பேசும் பொருளாக இருக்கும் பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.