இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள குல்லு மாவட்டத்தின் பஞ்சார் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானது. 17 பேரை ஏற்றிச் சென்ற டெம்போ ட்ராவலர் மலைக்குன்றில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனத்தில் வந்தவர்கள் அனைவரும் சுற்றுலாவிற்காக வந்தவர்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கியவர்கள் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா, டெல்லி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த ஏழு பேரில் 3 பேர் ஐஐடி மாணவர்கள்.
பருவ மழைக்காலம் என்பதால் இமாச்சல் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இது போன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, ஆபத்து மிக்க மலை தொடர்களில் சுற்றுலா பயணிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கனமழை காரணமாக சில இமாச்சலில் உள்ள டைரன்ட் மலைப்பகுதியில் சுற்றுலாவுக்கு வந்த 80க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கிய நிலையில், மாநில பேரிடர் மீட்பு குழுவின் முயற்சியால் அவர்கள் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
newstm.in