
பிட்னஸ் டிரையினருக்கு கார் பரிசளித்த கமல்ஹாசன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் தயாரித்து நடித்து திரைக்கு வந்த விக்ரம் படம் 400 கோடிக்கு மேல் வசூலித்ததோடு, 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை செய்து இருக்கிறது. அதையடுத்து தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார் கமலஹாசன். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு அமெரிக்கா சென்று விட்டு திரும்பினார். இந்த நிலையில் தற்போது தனக்கு பயிற்சி கொடுத்த பிட்னஸ் டிரையினருக்கு ரொனால்டு கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார் கமல்ஹாசன். அது குறித்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.