பெங்களூர் நிறுவனத்திற்கு ரூ.21,000 கோடி வரி நோட்டீஸ்.. ஜிஎஸ்டி துறை அதிரடி..!

பெங்களூர்: ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் (DGGI) பெங்களூரைச் சேர்ந்த ஆன்லைன் கேமிங் நிறுவனமான கேம்ஸ்க்ராஃப்ட் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இதுவரை இந்திய வரலாற்றில் மறைமுக வரி விதிப்பில் யாரும் பெற்றிடாத மிகப்பெரிய ஷோ காஸ் நோட்டீஸை அனுப்பியுள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் கேம் விளையாடுவதில் பெட்டிங் கலாச்சாரம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், இதில் பல பிரச்சனைகள் இருப்பதைத் தாண்டி அதிகளவில் வரி ஏய்ப்புச் செய்யப்படுகிறது.

அந்த வகையில் கேம்ஸ்க்ராஃப்ட் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் தற்போது மறைமுக வரி அமைப்பான GST நுண்ணறிவு இயக்குநரகத்திடம் மாட்டியுள்ளது.

ரூ.25 கோடி பரிசு விழுந்தும் நிம்மதியில்லை.. லாட்டரியில் வெற்றி பெற்ற ஆட்டோ ஓட்டுனர் வருத்தம்..ஏன்?

கேம்ஸ்க்ராஃப்ட் டெக்னாலஜி

கேம்ஸ்க்ராஃப்ட் டெக்னாலஜி

GST இன்டெலிஜென்ஸ் இயக்குநரகம் கேம்ஸ்க்ராஃப்ட் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் சுமார் 21,000 கோடி ரூபாய் அளவிலான ஜிஎஸ்டி வரியை செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. 2017 முதல் ஜூன் 30, 2022 வரையிலான காலகட்டத்தில் இந்நிறுவனம் பெற்ற பெட்டிங் தொகைக்கு வரி விதித்து GST நுண்ணறிவு இயக்குநரகம் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெங்களூர்

பெங்களூர்

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கேம்ஸ்க்ராஃப்ட் (Gameskraft) டெக்னாலஜி நிறுவனம் கார்டு கேம் வாயிலாகச் சாதாரண மற்றும் பேன்டசி கேம்களான ரம்மி கல்ச்சர், கேம்ஸி, ரம்மி டைம் போன்றவற்றில் ஆன்லைன் பெட்டிங்-ஐ ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

DGGI 28 சதவீத வரி விதிப்பு
 

DGGI 28 சதவீத வரி விதிப்பு

மேலும் DGGI கேம்ஸ்க்ராஃப்ட் டெக்னாலஜி நிறுவனம் பெட்டிங் தொகையாக 2017 முதல் ஜூன் 30, 2022 வரையிலான காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட ரூ.77,000 கோடி பெற்றுள்ளது இதற்கு 28 சதவீதம் வரி விதித்தும், அதை உடனடியாகச் செலுத்த கோரியும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

மறைமுக வரித் துறை

மறைமுக வரித் துறை

இந்திய மறைமுக வரித் துறை இதுவரையில் எந்தொரு நிறுவனத்திற்கும் 21,000 கோடி ரூபாய் வரையிலான தொகைக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியது இல்லை என்பதால் கேம்ஸ்க்ராஃப்ட் டெக்னாலஜி நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளது.

பெட்டிங்

பெட்டிங்

கேம்ஸ்க்ராஃப்ட் (Gameskraft) டெக்னாலஜி நிறுவனம் பணமாகப் பெட்டிங் செய்ய அனுமதி அளித்துள்ளது, இதேபோல் ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி போன்ற கார்டு கேம்களுக்கும் பெட்டிங் வைக்க வழிவகைச் செய்துள்ளது என DGGI அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. மேலும் பெட்டிங் தொகைக்கு எவ்விதமான பில், ரசீதை வழங்கவில்லை என்பதை DGGI அமைப்பின் தடயவியல் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

DGGI slaps biggest ever GST show cause notice to Bengaluru Gameskraft Technology for Rs 21,000 crore

DGGI slaps biggest ever GST show cause notice to Bengaluru Gameskraft Technology for Rs 21,000 crore

Story first published: Monday, September 26, 2022, 13:24 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.