பெரும் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ்.. மீண்டும் வரலாற்றுச் சரிவில் ரூபாய் மதிப்பு..!

சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்கள் பங்கு விற்பனையை நிறுத்தாத காரணத்தால் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை பெரிய அளவிலான சரிவுடன் துவங்கி முதலீட்டாளர்களைப் பயமுறுத்தியுள்ளது.

இன்றைய வர்த்தகம் துவங்கும் போதே சென்செக்ஸ் 1.27 சதவீத சரிவுடன் வர்த்தகத்தைப் பதிவு செய்தது.

சென்செக்ஸ், நிஃப்டி இன்று எப்படியிருக்கும்.. கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன?

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகம் துவக்கத்தில் 1.27 சதவீதம் வரையில் சரிந்து அதிகப்படியாக 57,282.20 புள்ளிகளை எட்டியது. விப்ரோ, இண்டஸ்இந்த் வங்கி, டாடா ஸ்டீல், மாருதி சுசூகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பவர்கிரிட் ஆகியவை அதிகப்படியான சரிவைப் பதிவு செய்தது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1020.80 புள்ளிகள் சரிந்து 58,098.92-ல் முடிந்தது. நிஃப்டி குறியீடு, 302.45 புள்ளிகள் குறைந்து 17,327.35 இல் முடிந்தது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30-பங்குகளில் பவர் கிரிட் அதிகப்படியான சரிவைப் பதிவு செய்தது. பவர் கிரிட் பங்குகள் 7.93 சதவீதம் சரிந்து ரூ.202.60 ஆக இருந்தது.

 கச்சா எண்ணெய் விலை
 

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை இன்று காலை வர்த்தகத்தில் தனது 8 மாத சரிவில் இருந்து கணிசமாக உயர்ந்தது. அமெரிக்க டாலர் ஆதிக்கம் மற்றும் உலக நாடுகளின் வட்டி விகித உயர்வு ஆகியவை உலகளவில் ரெசிஷன் உருவாகி கச்சா எண்ணெய் தேவையைக் குறைக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 ஜப்பான் பங்குச்சந்தை

ஜப்பான் பங்குச்சந்தை

இன்று காலை வர்த்தகத்தில் ஜப்பான் பங்குச்சந்தையும் சரிவுடன் தான் துவங்கியது. இக்காலாண்டின் கடைசி வர்த்தக வாரம் இது, ஆனால் ஆசிய சந்தை பெரும்பாலானவை சரிவில் உள்ளது. இதன் எதிரொலியாக ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.

 டாலர் அதிக்கம், ரூபாய் சரிவு

டாலர் அதிக்கம், ரூபாய் சரிவு

அமெரிக்கப் பத்திர சந்தையில் அதிகப்படியான முதலீடு மற்றும் டாலர் இன்டெக்ஸ் குறியீடு உயர்வு ஆகியவை திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 0.68 சதவீதம் சரிந்து 81.55 ரூபாய் அளவில் குறைந்து வரலாற்று சரிவை பதிவு செய்தது. இதேவேளையில் அமெரிக்காவின் கருவூல லாப அளவுகள் 4.2 சதவீதம் உயர்ந்துள்ளது.

 திங்கட்கிழமை காலை வர்த்தகம்

திங்கட்கிழமை காலை வர்த்தகம்

திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 57,282.20 புள்ளிகள் வரையில் சரிந்திருந்தது, இதைத் தொடர்ந்து 9.40 மணியளவில் சென்செக்ஸ் 796.47 புள்ளிகள் சரிந்து 57,302.45 புள்ளிகளை எட்டியது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனத்தில் நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், இன்போசிஸ் ஆகியவை மட்டுமே உயர்வுடன் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sensex tanks over 700 points; Rupee hit a fresh record low of 81.55 against USD

stock market live updates today 26 September 2022: Sensex tanks over 700 points; Rupee hit a fresh record low of 81.55 against USD

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.