மும்பையின் Vile Parle பகுதியில் 7குடியிருப்புகள் அடுத்தடுத்து திடீரென்று இடிந்து விழும் வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த சம்பவத்தில் குடியிருப்பு வாசிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று அருகில் இருந்த 24 கட்டிடங்களில் வசித்த மக்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினர்.
அவர்கள் அனைவரும் அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குடியிருப்புகள் இடிந்து விழுந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.