புதுடெல்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (67) கடந்த ஜூலை 8ம் தேதி நாரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் படுகொலை செய்யப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்திய டெட்சுயா யமகாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ச்சியாக ஜூலை 12ம் தேதி ஷின்சோ அபேவுக்கு தனிப்பட்ட முறையிலான இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. ஆனால் பொதுவான இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் நாளை (செப். 27) ஷின்சோ அபேவுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. அதற்காக தலைநகர் டோக்கியோவின் நிப்பான் புடோகன் மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் 190 வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் செல்கிறார்.
அவர் ஷின்சோ அபேயின் மனைவி அகி அபேவை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார். மேலும் அந்நாட்டு ஃபுமியோ கிஷிடா உள்ளிட்ட பிற தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார். ஜப்பான் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை இரவு பிரதமர் மோடி ெடல்லி திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.