மேகன் மெர்க்கல் ஒரு பொய்யர்! கடுமையாக எழும் விமர்சனங்கள்… காரணம் இதுதான்


மேகன் மெர்க்கல் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வரும் நிலையில் அவர் ஒரு பொய்யர் என ஒரு தரப்பினர் சமூகவலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு டிரண்ட் செய்து வருகின்றனர்.

அரச குடும்பத்தினர் தொடர்பான தகவல்களை வெளியிடும் புத்தங்களில் மேகன் குறித்த எதிர்மறையான தகவல்கள் பல இடம்பெற்றிருக்கின்றன.
Valentine Low என்ற எழுத்தாளரின் Courtiers: the Hidden Power Behind the Crown என்ற புத்தகத்தில், மேகன் எப்படி தன்னிடம் பணியாற்றிய ஊழியர்களை துன்புறுத்தி அவர்களிடம் கத்தி, திட்டுவார் என்பது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.

மேகன் மெர்க்கல் ஒரு பொய்யர்! கடுமையாக எழும் விமர்சனங்கள்... காரணம் இதுதான் | Meghan Markle Criticized Social Media Tweets

geo

மேலும் திருமணத்திற்கு முன்னர் தன்னை காதலிப்பதை ஹரி அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டால், அவரை பிரிந்துவிடுவதாக மேகன் மிரட்டினார் என்பது போன்ற தகவல்கள் அந்த புத்தகத்தில் உள்ளது.

இதோடு மேகன் பொறாமை குணம் கொண்டவர், விளம்பர பிரியர் ராணி இறுதிச்சடங்கில் முதலை கண்ணீர் விட்டார் என்ற விமர்னங்களையும் பலரும் முன் வைக்கின்றனர்.


இந்நிலையில் மேகனை தொடர்ந்து விமர்சித்து எதிர்க்கும் ஒரு சாரார் #MeghanMarkIeisaLiar (மேகன் மெர்க்கல் ஒரு பொய்யர்) என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு டிரண்டாக்குகின்றனர், இதில் பதிவிடும் பலரும் அரச குடும்ப ஆதரவாளர்கள் என்ற நிலையில் மேகனை மட்டும் விமர்சித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.