ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை அடுத்த முதல்வராக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் அசோக் கெலாட் மற்றும் அவரது ஆதரவு 82 எம்.எல்.ஏக்கல் மீது காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. மேலும் அசோக் கெலாட் ஆதரவு 82 எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் உள்ளிட்டோர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கமல்நாத், திக்விஜய்சிங் உள்ளிட்டோரும் போட்டியிடலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்பது பொதுவான கருத்து. காங்கிரஸ் மேலிடமும் தற்போது வர அசோக் கெலாட்டையே ஆதரித்து வருகிறது. ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் நிகழ்வுகளால் காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
அசோக் கெலாட்- பைலட்டுக்கு எதிர்ப்பு
அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவரானால் ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார்? என்பதுதான் பிரச்சனை. ராஜஸ்தானில் ஏற்கனவே காங்கிரஸில் 18 எம்.எல்.ஏக்களுடன் போர்க்கொடி தூக்கியவர் சச்சின் பைலட். இதனால் சச்சின் பைலட் அடுத்த முதல்வராகக் கூடும் என கருதப்பட்டது. ஆனால் அசோக் கெலாட் இப்போதும் சச்சின் பைலட்டுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார். தாம் காங்கிரஸ் தலைவரானால் ராஜஸ்தான் முதல்வராக சபாநாயகர் சிபி ஜோஷியை நியமிக்க வேண்டும் என பரிந்துரைத்தார் கெலாட்.
82 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா
இப்பிரச்சனை குறித்து மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து கேசி வேணுகோபால் புதிய மேலிடப் பார்வையாளராக ராஜஸ்தானுக்கு அனுப்ப ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் போர்க்கொடி தூக்கி இருக்கிற 82 எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நோட்டீஸ் அனுப்பும் மேலிடம்
இப்பிரச்சனை குறித்து மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து கேசி வேணுகோபால் புதிய மேலிடப் பார்வையாளராக ராஜஸ்தானுக்கு அனுப்ப ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் போர்க்கொடி தூக்கி இருக்கிற 82 எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சச்சின் பைலட் நிலைப்பாடு
இதனிடையே ஜெய்ப்பூரில்தான் சச்சின் பைலட் முகாமிட்டிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை, காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவெடுத்தாலும் அதனை ஏற்க தயாராக இருக்கிறேன். நான் டெல்லி செல்லவில்லை என கூறியிருக்கிறார். ராஜஸ்தான் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள குழப்பம் அக்கட்சி மூத்த தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.