புனே, : ”மற்ற நாடுகளின் கரன்சி மதிப்புடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சீராகவே உள்ளது,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் நேற்று கூறியதாவது: அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவடைந்துள்ளதால், பெரும்பாலான நாடுகளின் கரன்சி மதிப்பு களில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.
இந்த ஏற்றத்தாழ்வையும், நிலையற்ற தன்மையையும் தாக்குப் பிடித்து சீராக உள்ளது என்றால், அது இந்திய ரூபாயின் மதிப்பு தான். இந்த விவகாரத்தை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கூர்ந்து கவனித்து வருகின்றன. ஆசிய சந்தைகளில் பல நாடுகளின் கரன்சி மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இந்த நாடுகளை ஒப்பிடுகையில் நம் நாட்டின் ரூபாய் மதிப்பு சீராகவே உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
புனே, : ”மற்ற நாடுகளின் கரன்சி மதிப்புடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சீராகவே உள்ளது,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்