டெல்லி: 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்று 200 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக 2019 ஆண்டு கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையின் போது சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு கோடி கணக்கில் அரசு பொருட்கள் வாங்கி கொடுத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து வழக்கு தொடர்பாக நடை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் விசாரணை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் பின்னர் அவரையும் குற்றவாளியாக வழக்கில் சேர்த்தனர்.
சுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்த 215 கோடி ரூபாய் பணத்தில் 5.71 கோடி ரூபாய்க்கு ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடிகை ஜாக்குலின் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சைலேந்தர் மாலிக், 50,000 ரூபாய் சொந்த பிணையில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து 200 கோடி ரூபாய் மோசடி வழக்கின் விசாரணை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.