வாரியபொல கனத்தேவெவ பகுதியைச் சேர்ந்த 2 வயது குழந்தை விசர் நாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி விசர்நாய் ஒன்று மேற்படி குழந்தையை கடித்துள்ளதுடன் அவரது வீட்டு நாயையும் கடித்துள்ளது.
அந்த நாய் விசர் நாயாக இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை அடுத்து, தடுப்பூசி போடுவதற்காக குழந்தையின் பெற்றோர் வாரியபொல மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர்.
எவ்வாறாயினும், வாரியபொல வைத்தியசாலையில் விசர் நாய்க்கடி தடுப்பூசி கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது பெற்றோர் குழந்தையை நிக்கவெரட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று செப்டம்பர் 4, 7 மற்றும் 11 ஆம் திகதிகளில் 3 தடுப்பூசிகள் பெறப்பட்ட நிலையில்
இறுதி டோஸ் போடப்படுவதற்குள் செப்டம்பர் 21 ஆம் திகதி குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து நிக்கவெரட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த குழந்தை விசர் நாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என கண்டறியப்பட்ட நிலையில் குறித்த குழந்தை செப்டம்பர் 23ஆம் திகதி உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.