விடுதியில் தங்கிய தோழிகளின் குளியல், உடை மாற்றும் காட்சிகளை செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தன் டாக்டர் நண்பருக்கு அனுப்பி அவரை குஷிபடுத்திய மாணவியை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக் (31). எம்பிபிஎஸ் படித்துள்ள இவர், கமுதி முஸ்லிம் பஜாரில் கிளினிக் நடத்தி வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. இவருக்கும், கிளினிக் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காளீஸ்வரி தற்போது மதுரை, அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, அங்குள்ள கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார்.
இந்நிலையில் காளீஸ்வரி, விடுதியில் தன்னுடன் தங்கியுள்ள தோழிகளின் குளியல், உடை மாற்றும் காட்சிகளை செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தன் நண்பரான டாக்டர் ஆசிக்குக்கு அனுப்பி அவரை குஷிபடுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் ஒருநாள், காளீஸ்வரி ரகசியமாக போட்டோ மற்றும் வீடியோ எடுத்து யாருக்கோ அனுப்புவதை பார்த்த சக தோழிகளில் ஒருவர், இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் புகார் அளித்தார். அவர், காளீஸ்வரி செல்போனை சோதித்தபோது, ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள் இருந்தது தெரிந்தது.
இதையடுத்து, மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை டாக்டர் ஆசிக்கிற்கு அனுப்பியது தெரிய வந்தது. இதையடுத்து, காளீஸ்வரி மற்றும் டாக்டர் ஆசிக்கை போலீசார் கைது செய்தனர்.