விஷமானது விரும்பி சாப்பிட்ட சாண்ட்விஜ்.. 3 சிறுவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி..!

ராணிப்பேட்டையில், பேக்கரியில் சாண்ட்விஜ் சாப்பிட்ட மூன்று சிறுவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே கோட்டைமேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாலமன். இவர், தனது குடும்பத்தினருடன் ராணிப்பேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது பஜார் வீதியில் உள்ள ஒரு பேக்கரியில் தேநீர் அருந்துவதற்காக சென்றுள்ளனர். அப்போது சாலமனும் அவருடைய மனைவி ரூபியும் தேநீர் அருந்தியுள்ளனர். சிறுவர்களான சைமன் (10), ரூபன்(7), ஜான்சன்(9) ஆகிய மூவரும் சாண்ட்விஜ் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து வீட்டிற்கு சென்றதும், மூன்று சிறுவர்களுக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மூவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில அனுமதித்தபோது, உணவு ஒவ்வாமை ஏற்பட்டதே காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிறுவர்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் போலீசார் உதவியோடு அந்த பேக்கரியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உணவு தயார் செய்யும் இடத்தில் இருந்து நிறத்தை கூட்ட பயன்படும் ரசாயன நிறமிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும், கடையில் இருந்த சாண்ட்விஜ் மற்றும் இதர உணவுப் பொருட்களை சோதனைக்காக எடுத்துச் சென்றதோடு, பேக்கரிக்கு தற்காலிகமாக சீல் வைத்தனர். மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள பேக்கரிகளில் சோதனை நடைபெறும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேக்கரியில் சாண்ட்விஜ் சாப்பிட்ட மூன்று சிறுவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.