வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
18 முதல் 59 வயதுக்குட்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ‘மனுசவி’ என்ற ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுசவி ஓய்வூதியத் திட்டத்தில் பயனடைவதற்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டுத் தொழிலிலுக்காக சென்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.