மாட்ரிட்,
ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ்க்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இத்தகவலை அவரே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார்.
மேலும் அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் தொடர்ந்து பணியாற்ற போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்பெயினில் 60 வயதை கடந்தவர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு இன்று 4-வது ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இந்த சூழ்நிலையில், அந்நாட்டு பிரதமர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் இருந்து திரும்பிய இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அனைத்து அரசாங்க நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.