
தவறான தகவல்களை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களில் இருந்து 45 வீடியோக்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
தேச பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிப்பதாக மத்திய அரசு யூடியூப் சேனல்களை கண்காணித்து அவ்வப்போது முடக்கி வருகிறது. கடந்த காலங்களில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை சேர்ந்த யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் தவறான தகவல்களை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களில் இருந்து 45 வீடியோக்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான செய்திகளை பரப்பியதற்காக முடக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்டுள்ள இந்த வீடியோக்களை 1 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமானோர் ஏற்கனவே பார்த்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முடக்கப்பட்ட வீடியோகளில் மத சமூகங்களிடையே வெறுப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன் பரப்பப்பட்ட போலிச் செய்தி வீடியோக்கள் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்களும் அடங்கும் என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
newstm.in