தங்கம் வாங்குவதில் இந்தியர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பதும் சேமிப்புக்காக மட்டுமின்றி ஆபரணங்களுக்காகவும் தங்கம் வாங்குவது வழக்கமாக உள்ளது என்றும் தெரிந்ததே.
இந்த நிலையில் சலுகை விலையில் தங்கம் கிடைத்தால் அதை வாங்குவதில் இந்தியர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் டாடாவின் தனிஷ்க் நிறுவனம் 7.5 சதவீத சலுகை விலையில் தங்கம் வாங்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது
தனிஷ்க் தங்கநகை
தங்கநகை விற்பனை பிராண்டான டாடாவின் தனிஷ்க் நாடு முழுவதும் 350க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டுள்ளது என்பதும், ஏராளமான வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மலிவான விலையில் தங்க நகைகளை வாங்க தனிஷ்க் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. தங்கநகைகளை மலிவாக வாங்க திட்டமிட்டால், அதை தனிஷ்க் கோல்டன் ஹார்வெஸ்ட் கணக்கு மூலம் வாங்கலாம். இந்த சிறப்புக் கணக்கு இரட்டிப்பு தள்ளுபடியை தருகிறது. தனிஷ்க் பிராண்ட் நகைகளுக்கு தள்ளுபடியும், 7.5 சதவீதம் கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.
திட்டம் என்ன
தனிஷ்க் கோல்டன் ஹார்வெஸ்ட் என்பது தான் திட்டத்தின் பெயர். இந்த கணக்கை தொடங்கினால் 10 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். முதல் தவணைக்கு கூடுதலாக 75% தள்ளுபடி வழங்கப்படும். அதாவது நீங்கள் ரூ.4000 டெபாசிட் செய்தால் 3000 ரூபாய்க்கு கூடுதல் தங்கம் பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.2000 மற்றும் அதன் பிறகு ரூ.1000 மடங்குகளை டெபாசிட் செய்யலாம்.
7.5 சதவீதம் தள்ளுபடி
தனிஷ்க் நிறுவனத்தின் இந்த திட்டத்தின்படி நீங்கள் மாதம் ரூ.4000 டெபாசிட் செய்யத் தொடங்கினால். இதன் மூலம், 10 மாதங்களில் உங்கள் மொத்த டெபாசிட் 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். முதல் தவணை ரூ.4000 என்பதால் உஙக்ளுக்கு கூடுதலாக 75% அதாவது ரூ.3000 கிடைக்கும். இது மொத்த டெபாசிட் தொகையில் 7.5 சதவீதம் ஆகும். 10 மாதங்களுக்குப் பிறகு நீங்கள் கணக்கை மீட்டெடுக்கும்போது, நீங்கள் ரூ.43000 மதிப்பில் நகைகளை வாங்க முடியும். ரூ.3000 இந்த திட்டத்தினால் கிடைக்கும் வட்டி போனஸ் ஆகும்.
டைட்டன் சிறப்பு உறுப்பினர் திட்டம்
இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கியவர்கள் நகைகளை ரிடீம் செய்யும் போது தனிஷ்க் வழங்கும் வேறு சலுகைகள் ஏதேனும் இருந்தால், அதையும் பயன்படுத்தி கொள்ள முடியும். குறிப்பாக கோல்டன் ஹார்வெஸ்ட் கணக்கை திறப்பதன் மூலம், டைட்டனின் பிரத்யேக திட்டத்தை பயன்படுத்தி கொள்ள முடியும். இதேபோல், அனைத்து டைட்டன் கடைகளிலும் சிறப்பு உறுப்பினர் திட்டத்தைப் பயன்படுத்தி கொள்ள முடியும்.
தனிஷ்க் செயலி
நீங்கள் இந்த கணக்கை தொடங்க விரும்பினால், தனிஷ்க் செயலி அல்லது அதன் இணையதளத்திற்கு சென்று கணக்கை தொடங்கலாம். ரிடீம் செய்வதை பொறுத்தவரை, எந்த தனிஷ்க் கடையிலும் நீங்கள் ரிடீம் மதிப்பைப் பெற முடியும். இதுமட்டுமின்றி, கோல்டன் ஹார்வெஸ்ட் கணக்கைத் திறக்கும்போது, பழைய நகைகளின் தூய்மையை இலவசமாக சரிபார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tanishq offering 7.5 percent discount on Gold and many other benefits!
Tanishq offering 7.5 percent discount on Gold and many other benefits! | 7.5 சதவீத தள்ளுபடி விலையில் தங்கம் வேண்டுமா.. தனிஷ்க் வழங்கும் சிறப்பு சலுகை!