இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முதலும் முக்கியமான ஒன்றாக விளங்கும் எரிபொருளின் விலையை நிர்ணயம் செய்யும் கச்சா எண்ணெய் விலை 90 டாலருக்கு அதிகமாக இருந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் வைத்திருந்தது.
சில நாட்களுக்கு முன்பு கூட மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்றால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 88 டாலருக்குக் கீழ் குறைய வேண்டும் அப்போது தான் விலை தளர்வுகளை அறிவிக்க முடியும் எனக் கூறியிருந்தார்.
அதற்கான நேரம் வந்து விட்டது, மக்கள் எதிர்கொண்டு வரும் எரிபொருள் சுமை பெரிய அளவில் குறைய உள்ளது.
டிசிஎஸ்: வாரம் 3 நாள் கட்டாயம் ஆபீஸ்.. புதிய உத்தரவு..!

ரெசிஷன் அச்சம்
உலகளவில் பணவீக்கம் தாறுமாறாக அதிகரித்து, நாணய மதிப்பு சரிந்து பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் 2022 ஆண்டு முடிவிற்குள் பெரிய பொருளாதார நாடுகள் ரெசிஷனுக்குள்ள நுழையும் என்பது பல வகையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பொருளாதார மந்த நிலை
இந்தப் பொருளாதார மந்த நிலை அச்சத்தால் உலகளவில் கச்சா எண்ணெய்-க்கான டிமாண்ட் பெரிய அளவில் குறையும் நிலை உருவாகியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பல மாதங்களுக்குப் பின்பு 85 டாலர் அளவுக்குக் குறைந்துள்ளது. சொல்லப்போனால் ரஷ்யா – உக்ரைன் போருக்கு முன்பு அதாவது ஜனவரி மாதத்தில் இருந்த விலை இது.

கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 78.60 டாலருக்கும், WTI கச்சா எண்ணெய் விலை 85.97 டாலருக்கும் சரிந்துள்ளது. மேலும் ஸ்காண்டிநேவியா- வில் ரஷ்ய கச்சா எண்ணெய் கசியும் அபாயம் உருவாக்கியுள்ளது.

OPEC நாடுகள்
கச்சா எண்ணெய் விலை சரிவால் உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான OPEC தனது உற்பத்தி அளவை குறைக்கத் திட்டமிட்டு, அதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. கச்சா எண்ணெய் விலை வெள்ளிக்கிழமை மட்டும் 5 சதவீதம் வரையிலும், மொத்த வாரத்தில் 8 சதவீதம் வரையில் சரிந்திருந்தது.

எரிபொருள்
கச்சா எண்ணெய் போல் கடந்த வாரத்தில் இயற்கை எரிவாயு விலை 11 சதவீதமும், எரிபொருள் விலை 4 சதவீதமும் குறைந்துள்ளது. ஆனால் டாலர் மதிப்பு உயர்ந்த காரணத்தால் பெரிய அளவிலான விலை மாற்றத்தை டாலர் அல்லாத நாணயத்தைப் பயன்படுத்தும் நாடுகள் எதிர்கொள்ளவில்லை.

இந்தியன் பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை
இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியுமா என்ற சந்தேகம் அதிகரித்து வருகிறது. WTI கச்சா எண்ணெய் விலை 78.60 டாலருக்கும், WTI கச்சா எண்ணெய் விலை 85.97 டாலருக்குச் சரிந்தாலும் இந்தியன் பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை 91.62 டாலராக உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை
இந்தியன் பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை ஆகஸ்ட் 30ஆம் தேதி 102 டாலராக இருந்தது. விலைவாசி உயர்வால் தவித்து வரும் மக்களுக்கு மத்திய அரசு பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையைக் கொடுத்து விடிவு காலத்தைக் கொடுக்குமா..?
Brent crude oil fall below 85 USD; does petrol, diesel price will cut by Modi Govt
Brent crude oil fall below 85 USD; does petrol, diesel price will cut by Modi Govt